ஒருவழியா... கைலாசா எங்கே? புதிதாக வீடியோ வெளியிட்ட நித்யானந்தா!
கைலாசா குறித்து நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நித்யானந்தா
தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு நித்தியானந்தா தப்பிச் சென்றார். அப்போது முதல் இப்போது வரை நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.
தொடர்ந்து, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறிக்கொள்கிறார். மேலும், தனி கொடி, பாஸ்போர்ட் ஆகியவற்றை வெளியிட்டார். அது மட்டும் இன்றி கைலாசா நாட்டில் குடியேற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
கைலாசா எங்கே?
இந்நிலையில், வரும் 21 ஆம் தேதி கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். ஒரு இணையதள லிங்க் மற்றும் வாட்ஸ் அப் எண் ஆகியவற்றையும் பகிர்ந்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், மனித உடலெடுத்த எல்லோருக்கும் அழைப்பு விடுக்கிறேன். கைலாசாவின் கதவுகள் திறந்து இருக்கின்றன. கதவை நான் திறந்தாலும் நீங்கள் கால் எடுத்து வைத்தால்தான் உள்ளே வர முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.