சிரமமானது - ஜி.எஸ்.டி வரிகளை நீக்குங்க..நிர்மலா சீதாராமனுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்!!
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பலதரப்பில் இருந்தும் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இந்த பட்ஜெட் என்பது நிறைவான ஒன்றாக இருப்பதாகவே பாஜகவினர் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் தான், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான 18% சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்பப் பெறக் கோரி சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிரமமாக உள்ளது
வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், காப்பீடு துறையின் வளர்ச்சியையும் இம்மாதிரியான வரிகள் கட்டுப்படுத்துவதாக அவர் நிர்மலா சீதாராமானுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளன.
மேலும், இம்மாதிரியான வரி விதிப்புகள் மூத்த குடிமக்களுக்கு(Senior Citizens) சிரமமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறாராம். முன்னதாக, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.