நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை - தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மக்களவையில் நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அறிக்கை தாக்கல்
தேர்தல் ஆண்டு என்பதால், தேர்தலுக்கு முன்பு இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தற்போது தேர்தல்கள் நடைபெற்று முடிந்து,
3-வது முறையாக கூட்டணி ஆட்சியாக அமைந்துள்ள பாஜக ஆட்சி. மீண்டும் நிர்மலா சீதாராமனே மத்திய நிதியமைச்சராக பொறுப்பு பெற்றுள்ளார். நாளை மத்திய அரசின் இந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதற்கு முன்பாக, இன்று பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர்.நாட்டின் முக்கியப் பொருளாதார அளவீடுகளை குறிக்கும் அறிக்கை இது. இதற்கு முன்னதாக, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் பெறும் சலசலப்பு உண்டாகியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி என சாடினார். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசினார்.அவ்வறிக்கையில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.