நான் செத்துட்டேனா? நேரத்தை குறிச்சு வச்சுக்கோங்க - வீடியோ போட்ட நித்தி

Nithyananda
By Sumathi Apr 02, 2025 05:36 AM GMT
Report

இறந்துவிட்டதாக பரவிய செய்திக்கு, தான் லைவ்வில் வருவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

இறந்ததாக வதந்தி

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடகா, பிடதியில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவினார்.

nithyananda

பின் நடிகை ஒருவருடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து பெண் சீடர்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் பெங்களூரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்ட நிலையில், தலைமறைவானார்.

அதனையடுத்து திடீரென கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். அது இந்துக்களுக்கான நாடு, தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்

நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல்

வீடியோ போட்ட நித்தி

இந்நிலையில், நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாக வீடியோவில் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கைலாசா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது.

அதில், நேரலையில் பகவான் நித்யானந்த பரமசிவம்! பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்மீது தொடுக்கப்பட்ட வதந்திகள் உலகம் முழுவதும் கேள்விகளையும், ஊகங்களையும், உண்மையை அறிய கூர்ந்த ஆர்வவத்தையும் எழுப்பி உள்ளது.

இனிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி 7PM ET அன்று, பகவான் நித்யானந்த பரமசிவம் நேரலையில் தோன்றுவார் என்று அறிவிக்கப்படுள்ளது! நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்: ஏப்ரல் 2, 2025 | 7PM ET என்று குறிப்பிடப்பட்டுள்ளது.