நித்யானந்தா நேரில் வர வேண்டும் - நீதிமன்றம் அதிரடி

Nithyananda Madras High Court
By Karthikraja Sep 04, 2024 08:30 PM GMT
Report

நித்யானந்தா உண்மையை சொல்ல வேண்டுமென நீதிபதி தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாசல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோவில் மடம் ஆகிய மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை ஏற்கனவே மடாதிபதிபதியாக இருந்த ஆத்மானந்தா நியமித்திருந்தார். 

nithyananda

இந்நிலையில் நித்யானந்தா மடாதிபதியாக இருந்த இந்த 4 மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

ஒருவழியா... கைலாசா எங்கே? புதிதாக வீடியோ வெளியிட்ட நித்யானந்தா!

ஒருவழியா... கைலாசா எங்கே? புதிதாக வீடியோ வெளியிட்ட நித்யானந்தா!

உண்மை தெரிய வேண்டும்

இந்த உத்தரவை எதிர்த்து, நித்யானந்தா சார்பில் அதிகாரம் பெற்ற நித்யா கோபிகா ஆனந்த் என்ற உமாதேவி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

nithyananda

விசாரணையில், உமாதேவி என்ற சீடருக்கு உண்மையிலேயே நித்யானந்தா பவர் ஆப் அட்டார்னியை வாங்கினாரா என நீதிமன்றம் அறிய விரும்புகிறது. எனவே நித்யானந்தா நேரில் ஆஜராகி பவர் ஆப் அட்டார்னி கொடுத்தது உண்மைதான் என தெரிவிக்க வேண்டும். நேரில் ஆஜராக முடியவில்லை என்றால் காணொலி காட்சி மூலம் ஆஜராகலாம்”எனத் தெரிவித்தனர்.

வழக்கு தள்ளுபடி

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நித்யானந்தா இந்தியாவில் இல்லை. மேலும் அவர் காணொளி மூலம் ஆஜராக இயலாது என தெரிவித்தார். இதனையடுத்து, மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்த அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. என கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை எனவும், அவரது கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளதாகவும், காஞ்சி பெரியவர் கூறியது போல, சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்