மீண்டும் வரும் நித்தி!! "மதுரை ஆதினம் நான் தான்" !! நீதிமன்றத்தில் மனு தாக்கல்!!
ஆன்மீகவாதியான நித்தியானந்தா தற்போது கைலாசா என்ற நாட்டில் வசித்து வருகிறார்.
நித்தியானந்தா
தமிழகத்தை அடிப்படையாக கொண்ட சாமியார்களின் அதிக கவனம் பெறுபவர் நித்தியானந்தா தான். சிறு சிறு உபேதசங்கள் செய்து வந்த அவர் மக்களிடம் பெற்ற செல்வாக்கை சில இடங்களில் தவறாக பயன்படுத்தியதாகவும், பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக புகார்கள் பல எழ அவரை தேடும் குற்றவாளியாக இந்திய அரசு அறிவித்தது.
இந்தியாவில் இருந்து தப்பிய நித்தியானந்தா கைலாசா என்ற புதிய நாடை நிறுவி, அதற்கான தனி வெப்சைட் ஒன்றை துவங்கி, சமூகவலைத்தளங்களில் தனது ஆன்மீக உபதேசத்தை மேற்கொண்டு வருகின்றார்.
மீண்டும் வரும் நித்தி
இதற்கிடையில், மதுரை ஆதீனத்தின் 292-வது மடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் கடந்த 2012 ஆம் ஆண்டில் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தார். அதனை தொடர்ந்து தான் நித்தியானந்தா மீது பல்வேறு சர்ச்சைகள் வரத்துவங்கிய நிலையில்,அவரின் நியமனம் திரும்பப்பெறப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக இதில், நித்தியானந்தாவின் நிலைப்பாடு குறித்து எந்தவித தகவலும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நித்தியானந்தா சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் மறைந்த பிறகு வேறு ஒருவரை ஆதீனமாக நியமித்ததை ஏற்க முடியாது என்பதை குறிப்பிட்டு தானே மதுரை ஆதீனம் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், அருணகிரிநாதர் இருக்கும் போது தன்னைதானே இளைய பீடாதிபதியாக அறிவித்தார் என்பதையும் தனது மனுவில் நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்த போது, இதில் மதுரை ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டார். தற்போது எந்தவித ஒப்பந்தமோ, உயிலோ இல்லாமல், 293-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமிக்கப்ட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.