பாசிச முகம் காட்டும் திமுக !! தமிழகமெங்கும் கைதான பாஜகவினர்!! கொந்தளித்த அண்ணாமலை!!
கொடி கம்ப நாடும் முயற்சியில் ஈடுபட்ட பாஜகவினர் இன்று கைதாகி உள்ளனர்.
அண்ணாமலை கண்டனம்
சென்னை பனையூரில் பாஜகவின் கொடி கம்பம் அகற்றப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் துவங்கி அடுத்த 100 நாட்களுக்கு தினமும் 100 கட்சி கொடி நாடும் பணியில் தங்கள் கட்சி ஈடுபடும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இன்று அப்பணியில் பல்வேறு இடங்களில் ஈடுபட்ட தமிழக பாஜகவினர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன பதிவில், தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற பாஜகவின் தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பாசிச முகத்தை காட்டும் திமுக
மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் தமிழக பாஜக பின்வாங்கப் போவதில்லை.
1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற @BJP4Tamilnadu தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) November 1, 2023
மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக… pic.twitter.com/TCdODqlGn3
ஆனால், காவல்துறை சார்பில் இது போன்று கட்சி கொடி அமைக்கும் போது அதற்காக மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறும் கடிதத்தை காவல் துறையினரிடம் சமர்ப்பிக்கவேண்டும், ஆனால் அது தங்களுகு வந்து சேராததால், பாஜகவினர் கொடி கம்பம் நட அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.