திடீரென Liveல் தோன்றிய நித்யானந்தா - வைரலாகும் வீடியோ - பக்தர்கள் பூரிப்பு
கைலாசா
திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சமீபத்தில் சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் கடிதம் மூலம் அது உண்மை கிடையாது என்று விளக்கமளித்தார்.
நித்தியானந்தா விளக்கம்
எனக்கு 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது, உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன். பக்தர்கள், சீடர்கள் மற்றும் கைலாசவாசிகள் அனைவருக்கும் வணக்கம். நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன். மிக விரைவில் எனது உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்களை மேற்கொள்வேன் என்று நித்தியானந்தா என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
3 மாதங்கள் பிறகு liveவில் தோன்றிய நித்யானந்தா
இந்நிலையில், 3 மாதங்கள் பின்பு திடீரெனறு நித்தியானந்தா Liveல் தோன்றியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த Liveல் அவர் பேசுகையில் -
குரு பூர்ணிமா நன்நாளில் பரமசிவம் பரம்பொருளின் ஆசி நம் எல்லோர் மீதும் இருக்கும். இன்று முதல் நாள் நான் சொல்ல விரும்புவது நன்றி. பல விதத்தில் கைலாசாவுக்கு துணையாகவும், ஆதரவாகவும், பலமாகவும் நின்ற எல்லா பக்தர்கள், அன்பர்கள், சீடர்கள், இந்துக்கள் அனைவருக்கும் என்னுடைய மானமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.
பல பேர் உங்களின் காலம், பணம், உங்களுடைய அன்பு, ஆதரவு, பல நிலைகளில் கைலாயத்திற்கு துணை புரிந்தீர்கள், புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மானமார்ந்த நன்றி. பல பேர் உடல் நலத்தை விசாரித்து உங்கள் அன்பையும், பரிவையும் வெளிப்படுத்தினீர்கள். அதற்காக அனைவருக்கும் நன்றி..
திடீரென கண்ணை திறந்து பார்த்தால் 3 மாதம் கழித்து உலகம் மொத்தமாக மாறி இருக்கிறது. நிறைய சொல்லலாம். ஏப்ரல் 13-ந் தேதி முதல் ஜூலை 13-ந் தேதி வரை நிறைவடைந்திருக்கிறது.
அது உங்களுக்கு 3 மாதம். எனக்கு ஒரு யுகம். கடந்த 3 மாதத்தில் எனது உடல், மூளை அனைத்தும் மாறி இருக்கிறது. இனிமேல் என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை. இனி வரும் நாட்களில் நான் சொல்ல வேண்டியதை சொல்கிறேன் என்று பேசினார்.
நித்யானந்தா தமிழ் சத்சங்கம் || குரு பௌர்ணமி || LIVE Tamil Satsang#GuruPurnima #GuruPurnima2022 #guru #Tamil #Pournami https://t.co/PvGoB71XOk
— KAILASA'S SPH JGM HDH Nithyananda Paramashivam (@SriNithyananda) July 13, 2022