நிலவில் குடியேறப்போகும் நித்யானந்தா - வெளியான தகவல் - ஷாக்கான மக்கள்

Nithyananda
By Nandhini Jul 12, 2022 07:47 AM GMT
Report

கைலாசா

திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சமீபத்தில் சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் கடிதம் மூலம் அது உண்மை கிடையாது என்று விளக்கமளித்தார்.

நித்தியானந்தா விளக்கம்

எனக்கு 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது, உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன்.

விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன். பக்தர்கள், சீடர்கள் மற்றும் கைலாசவாசிகள் அனைவருக்கும் வணக்கம். நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன். மிக விரைவில் எனது உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்களை மேற்கொள்வேன் என்று நித்தியானந்தா என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

nithyananda

நிலவில் குடியேறப்போகும் நித்தியானந்தா

இந்நிலையில், நித்தியானந்தா நிலவிலும், செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் குடியேறிய பின்னர் அங்கு பரமசிவன் கோவில் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஏற்பாடுகளை கைலாசா நிர்வாகம் செய்து வருவதாகவும், ஜூலை 13ஆம் தேதி ஆகிய நாளைய தினம் இந்திய நேரப்படி இரவு எட்டு முப்பது மணிக்கு நடைபெற இருக்கும் குரு பூர்ணிமா கொண்டாட்டத்திற்கு நேரடி சத்சங்கம் ஆற்றவும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

மூன்று மாத இடைநிறுத்த சமாதியானது அதாவது ஏப்ரல் 13ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய சிறந்த ஒரு நிகழ்வாகும் என்றும், உங்கள் உயிர் இருப்பில் பரமசிவத்துவம் முழுமையாக வெளிப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 

வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம் - கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது!