ஏழுமலையானாக அவதாரம் எடுத்த நித்யானந்தா என்ன காரணம்?

god ezhumalayana nithyananda kailasa
By Jon Apr 09, 2021 10:29 AM GMT
Report

எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நித்யானந்தா திடீரென்று மாயமானார். பின்னர் கைலாசாவில் தனக்கென ஒரு தேசத்தை உருவாக்கி. தனது பிரத்யோக யுடூயூப் சேனல் மூலமாக தினம் தினம் வீடியோ வெளியிட்டு எல்லோரையும் அலற வைத்தார். இவரது புதிய நாடான கைலாசாவில் வசிக்கவும் கடை ஆரம்பிக்கவும் நித்யானந்தாவிற்கு பலர் கடிதம் எழுதியதன் மூலம் மீண்டும் பிரபலமானர் நிதயானந்தா.

இந்த நிலையில் தற்போது முற்றிலும் திருப்பதி ஏழுமலையானாகவே மாறி தனது பக்தர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் காட்சி அளிக்கிறார் நித்தியானந்தா. பலாத்கார வழக்கில் அகமதபாத் காவல்துறையினரால் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் நித்தியானந்தா,கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாட்டிற்கான தங்க நாணயங்களை வெளியிட்டார். காலணா, எட்டணா என தொடங்கி 10 பைசா வரை 5 வகையான நாணயங்களை அறிமுகம் செய்துள்ள நித்யானந்தா.

ஏழுமலையானாக அவதாரம் எடுத்த நித்யானந்தா என்ன காரணம்? | Nithyananda Incarnating Ezhumalayana God

தனது நாட்டிற்கெனபுதிய கல்விக்கொள்கை, பணக்கொள்கை, ரிசர்வ் வங்கி என அனைத்து அறிவுப்புகளையும் வெளியிட்டார் என்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில்,நித்யானந்தா தற்போது தினம் தினம் ஒரு அவதாரங்களை எடுத்து சிவனாக, கால பைரவராக தனது பக்தர்களுக்கு காட்சி கொடுத்த நித்யானந்தா .

தற்போது திருப்பதி பாலாஜி ஏழுமலையானாகவே மாறி பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளார். இந்த புதிய அவதாரத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நித்யானந்தா பாவ சமாதி தரிசனம் என்று பெயரிட்டுள்ளார்.

ஏழுமலையானாக அவதாரம் எடுத்த நித்யானந்தா என்ன காரணம்? | Nithyananda Incarnating Ezhumalayana God

மேலும், பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமான ஆசீர்வாதங்களையும் அருளையும் பெற்று உங்கள் நிதி நெருக்கடிகளிலிருந்து வெளிவருங்கள், செல்வம் ஏராளமாக பெருகும் என்றும் பதிவிட்டுள்ள நித்யானந்தா. அடுத்து என்னென்ன அவதாரம் எடுத்து அசத்த போகிறாரோ சாமியார் நித்தி? அதை பொறுத்திருந்து பார்ப்போம்.