Wednesday, May 28, 2025

பெண் சீடர்கள் மீது தாக்குதல் - 'கைலாசா'வில் இருந்து நித்தியானந்தா கதறல்!

India Nithyananda
By Sumathi 2 months ago
Report

தமது பெண் சீடர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக நித்தியானந்தா பதிவிட்டுள்ளார்.

நித்தியானந்தா

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் நித்தியானந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

nithyananda

அதில், பெண் சன்னியாசிகள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள். இந்த அச்சுறுத்தல்கள், அவர்களின் ஆன்மிக செயல்பாடுகளை மற்றும் உரிமைகளை பாதிக்கின்றன.

விண்வெளியில் தனியாக விண்வெளி மையத்தை கட்டமைக்கும் சீனா - அலறும் உலக நாடுகள்!

விண்வெளியில் தனியாக விண்வெளி மையத்தை கட்டமைக்கும் சீனா - அலறும் உலக நாடுகள்!

சீடர்கள் மீது தாக்குதல்

பெண் சன்னியாசிகள், சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள், மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறை அல்லது அச்சுறுத்தல்கள் ஏற்கனவே ஏற்றுக்கொள்ள முடியாதது.

நாம் அனைவரும் இந்நிலையை எதிர்த்து குரல் எழுப்பி, அவர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் ஆதரிக்க வேண்டும்! எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர்

அங்கிருந்தபடி பல்வேறு நாடுகளிலும் உள்ள அவரது சிஷ்யர்கள், பக்தர்களிடம் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.