இங்கேயும் வந்துட்டீங்களா? முழுவதுமாக AI மூலம் தயாரிக்கப்பட்ட நாளிதழ் வெளியீடு!
நாளிதழ் முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஐ. தொழில்நுட்பம்
இத்தாலியில் இருந்து வெளியாகி வரும் நாளிதழ் இல் போக்லியோ. இந்த நிறுவனம் முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் தயாரான நாளிதழை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து நாளிதழின் ஆசிரியர் கூறுகையில், இந்த 4 பக்க நாளிதழில் தலைப்புகள், செய்திகள், தொகுப்புகள், எழுத்துகள் என அனைத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டது.
நாளிதழ் தயாரிப்பு
தாங்கள் சேகரித்த செய்தியை சொன்னால் மட்டும் போதும், மற்றதையெல்லாம் அது பார்த்துக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
அந்த நாளிதழில் முதல் பக்கத்தில் ரஷ்ய அதிபர் புடினும், 10 துரோகங்களும் எனத் தலைப்பிட்டும், டிரம்ப்பை கிண்டலடித்தும் தலைப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
செய்தித்தாள் முழுவதிலும் ஒரு இலக்கணப் பிழை கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை பத்திரிக்கை துறையில் வேலை செய்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.