மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா திரும்ப உள்ள நித்தியானந்தா? - வெளியான புதிய தகவல் - பக்தர்கள் பரவசம்
பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா சாமியார், இந்திய நாட்டை விட்டே ஓடி ஒளிந்தார்.
திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நித்தியானந்தா இருக்கும் இடத்தை யாராலையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ரகசியமாகவே உள்ளது. அடிக்கடி நித்தியானந்தாவின் பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அடிக்கடி வீடியோக்களில் நித்தியானந்தா பேசி வந்த நிலையில், திடீரென்று அவரின் வீடியோக்கள் எதுவும் வெளிவரவில்லை. அவர் இறந்து விட்டதாக தகவல்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவின.
இதனையடுத்து, சமீபத்தில் சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் கடிதம் மூலம் அது உண்மை கிடையாது என்று விளக்கமளித்தார்.
நித்தியானந்தா விளக்கம்
எனக்கு 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது, உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
நான் மரணமடையவில்லை
இந்நிலையில், நித்தியானந்தா மீண்டும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், பக்தர்கள், சீடர்கள் மற்றும் கைலாசவாசிகள் அனைவருக்கும் வணக்கம். நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன். நான் மரணமடையவில்லை. மிக விரைவில் எனது உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்களை மேற்கொள்வேன் என்று நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் பரவசம்
இதைப் பார்த்த அவரது பக்தர்கள், உங்கள் பதிவுக்கு நன்றி. தயவுசெய்து எனது மனதுடன் இணைந்து அற்புதம் நிகழ்த்துங்கள், உங்கள் தரிசனத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் என்று பக்தர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தியா திரும்புவதாக தகவல்?
இந்நிலையில், நித்தியானந்தா மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 14-ம் தேதி பவுர்ணமி வருகிறது. அதற்கு முன்பு நித்தியானந்தா திருவண்ணாமலைக்கு வருவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.