யார் இந்த நித்தியானந்தா? Disney Plus Hotstarஇல் வெளியான ஆவணப்படம் - வைரலாகும் டிரைலர்
பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா சாமியார், இந்திய நாட்டை விட்டே ஓடி ஒளிந்தார்.
திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நித்தியானந்தா இருக்கும் இடத்தை யாராலையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ரகசியமாகவே உள்ளது. அடிக்கடி நித்தியானந்தாவின் பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அடிக்கடி வீடியோக்களில் நித்தியானந்தா பேசி வந்த நிலையில், திடீரென்று அவரின் வீடியோக்கள் எதுவும் வெளிவரவில்லை. அவர் இறந்து விட்டதாக தகவல்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவின.
இதனையடுத்து, சமீபத்தில் சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் கடிதம் மூலம் அது உண்மை கிடையாது என்று விளக்கமளித்தார்.
எனக்கு 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது, உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
நித்யானந்தாவின் ஆவணப்படம்
இந்நிலையில், கடந்த ஜூன் 2ம் தேதி “My Daughter Joined a Cult” என்ற பெயரில் நித்யானந்தாவின் ஆவணப்படம் (DisneyPlus Hotstar) ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.
இந்த ஆவணப்படம் 3 பாகங்களாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தை வைஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்க, நமன் சரையா என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த ஆவணப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில், நித்தியானந்தாவின் வாழ்க்கை முறை, அவர் எப்படி பக்தர்களை கவருகிறார், அவர்களை எப்படியெல்லாம் துன்புறுத்தினார், அவர் தியான பீடம் அமைத்தது எப்படி போன்ற பல கோணங்களில் அலசுகின்றது.
இதில் நிதியானந்தாவின் முன்னாள் பக்தர்கள், இந்நாள் பக்தர்கள், வல்லுநர்கள், பத்திரிக்கையாளர்கள் என பல பேர் நித்யானந்தா குறித்த பல உண்மைகளையும், தகவல்களையும் தெரிவிக்கிறார்கள்.
தற்போது இந்த ஆவணப் படம் குறித்த டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த டிரைலரில் ‘மில்லியன் கணக்கானவர்களால் நேசிக்கப்படுகிறார்? மில்லியன் கணக்கானவர்களால் வெறுக்கப்படுகிறார் ? யார் இவர் ? கடவுளா ? அல்லது சாமியாரா ?’ என்று உள்ளது.