பெண்களுக்கு அது வந்துரும்; பசங்கள நெனச்சா தான் பாவமா இருக்கு - நித்யா மேனன் ஓபன் டாக்!
அழுகை குறித்து நடிகை நித்யா மேனன் பேசியுள்ளார்.
நித்யா மேனன்
180 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை நித்யா மேனன். தொடர்ந்து வெப்பம், மாலினி 22 பாளையம்கோட்டை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கடைசியாக நித்யாமேனன் நடிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்தார்.
பேட்டி
நித்யா மேனன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், அழகை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "பெண்களுக்கு அழுகை என்பது நிச்சயமாக ஒரு பலமான ஆயுதம். ஆண்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
ஏனெனில் மிக எளிதில் அவர்கள் அழ மாட்டார்கள். பொதுவாக அழுவது என்பது மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. இதன் மூலம் உங்கள் வலிகள் குறையும். உங்கள் பாரத்தை அழுது முடித்து இறக்கி விட்டால் அடுத்த வேலையை நோக்கி நீங்கள் நகர்ந்து சென்று விடலாம்" என்று தெரிவித்துள்ளார்.