நித்யா மேனன் கர்ப்பத்திற்கு இவர்தான் காரணமாம்..!

Nithya Menen Pregnancy Gossip Today Viral Photos
By Sumathi Oct 31, 2022 06:30 PM GMT
Report
335 Shares

நடிகை நித்யா மேனன் இன்ஸ்டா பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நித்யா மேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து, கன்னடம் மற்றும் மலையாள சினிமாக்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த சைக்கோ மற்றும் திருச்சிற்றம்பலம் படம் பெரும் வரவேற்பினை பெற்றது.

நித்யா மேனன் கர்ப்பத்திற்கு இவர்தான் காரணமாம்..! | Nithya Menes Pregnancy Controversy

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரெக்னன்ஸி டெஸ்ட் செய்து பாசிட்டிவாக இரு கோடுகள் வந்த கிட்டையும் அதன் அருகே குழந்தைக்கு கொடுக்கப்படும் ரப்பர் நிப்பிலையும் வைத்து எடுத்த புகைப்படத்தை, And, the Wonder Begins என கேப்ஷன் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

பட அப்டேட்

அதனைத் தொடர்ந்து, இதுபோல் ஒரு படத்தை நடிகை பார்வதியும் நடிகை சயனோராவும் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளனர். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும், பல கேள்விகளையும் பதிவிட்டு குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இதற்கு காரணம் இயக்குநர் அஞ்சலி மேனன் என்பது தெரியவந்துள்ளது. இது அஞ்சலி மேனன் இயக்கும் புதிய படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாகும். இந்த படத்திற்கு wonder women என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகைகள் நதியா, பார்வதி, நித்யா மேனன், பத்மப்ரியா மற்றும் அர்ச்சனா பத்மிமி ஆகியோர் இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்களாக நடிக்க உள்ளனர்.