நித்யா மேனன் கர்ப்பம்..கல்யாணமே இன்னும் ஆகலையே - ரசிகர்கள் ஷாக்!
நடிகைகள் நித்யா மேனன், பார்வதி, சயனோரா ஆகியோரின் பதிவுகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நித்யா மேனன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து, கன்னடம் மற்றும் மலையாள சினிமாக்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த சைக்கோ மற்றும் திருச்சிற்றம்பலம் படம் பெரும் வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரெக்னன்ஸி டெஸ்ட் செய்து பாசிட்டிவாக இரு கோடுகள் வந்த கிட்டையும் அதன் அருகே குழந்தைக்கு கொடுக்கப்படும் ரப்பர் நிப்பிலையும் வைத்து எடுத்த புகைப்படத்தை, And, the Wonder Begins என கேப்ஷன் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கர்ப்பம்?
அதனைத் தொடர்ந்து, இதுபோல் ஒரு படத்தை நடிகை பார்வதியும் நடிகை சயனோராவும் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளனர். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும், பல கேள்விகளையும் பதிவிட்டு குழப்பத்தில் உள்ளனர்.

மேலும், இது அஞ்சலி மேனன் இயக்கும் புதிய படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாகும். நடிகைகள் நதியா, பார்வதி, நித்யா மேனன், பத்மப்ரியா மற்றும் அர்ச்சனா பத்மிமி ஆகியோர் இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்களாக நடிக்க உள்ளனர்.
பாடகி சயனோராவின் முதல் படமும் இதுதான். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan