அந்த நடிகர் என்னை அப்படி டார்ச்சர் செய்தாரா? தெரிஞ்சா சொல்லுங்க - பொங்கிய நித்யா மேனன்!
தன்னை குறித்து பரவிய வதந்திக்கு நித்யா மேனன் பதிலளித்துள்ளார்.
நித்யா மேனன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து, கன்னடம் மற்றும் மலையாள சினிமாக்களில் கலக்கி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்த சைக்கோ மற்றும் திருச்சிற்றம்பலம் படம் பெரும் வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து, மிழ் நடிகர் ஒருவர் அவரை படப்பிடிப்பில் துன்புறுத்தினார் என்று பேட்டி கொடுத்ததாகக் கூறி செய்தி ஒன்று உலாவியது.
வதந்திக்கு விளக்கம்
இது பெரும் வைரலான நிலையில், நித்யா மேனன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார். “ நான் நேர்காணலே கொடுக்கவில்லை. பத்திரிகைத்துறையின் சில பிரிவுகள், இப்படி இறங்கி இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இது தவறான செய்தி. இந்த செய்தியில் துளி கூட உண்மை இல்லை.
இந்த வதந்தியை ஆரம்பித்தவர் யார் என்பது உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சுட்டிக்காட்டவும். நாம் இங்கு மிகவும் குறுகிய காலகட்டமே வாழ்கிறோம். அப்படி இருக்கையில் நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
வெளி உலகத்திற்கு இதனை சொல்வதால் மட்டுமே இது போன்ற மோசமான நடவடிக்கைகளை நிறுத்த முடியும் என்பதால் இதனை நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள் IBC Tamil