ரோகித் - ஹர்திக் உங்களுக்கு நான் இத தான் சொல்றேன்...எதுவும் ஒழுங்கா இல்ல!! - நீடா அம்பானி அதிரடி!!
மும்பை இந்தியன்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து, கடும் விமர்சனங்களை பெற்று வருகின்றது.
மும்பை இந்தியன்ஸ்
புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தொடரை விட்டு வெளியேறிய நிலையில், பலரும் பல விமர்சங்களை அணி மீது வைத்து வருகிறார்கள்.
குறிப்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா இதன் முக்கிய பாய்ண்டாக இருக்கிறார். ரோகித் சர்மா ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவையே குறித்து வைத்து விமர்சித்து வருகின்றனர்.
நீடா அம்பானி
இச்சூழலில், மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து அணியின் உரிமையாளர் நீடா அம்பானி அணி வீரர்களிடம் பேசியுள்ளார். அவர் பேசியது வருமாறு, இந்த சீசன் அனைவருக்குமே ஏமாற்றமான ஒன்றாகவே அமைந்ததுள்ளது.
Mrs. Nita Ambani talks to the team about the IPL season and wishes our boys all the very best for the upcoming T20 World Cup ?#MumbaiMeriJaan #MumbaiIndians | @ImRo45 | @hardikpandya7 | @surya_14kumar | @Jaspritbumrah93 pic.twitter.com/uCV2mzNVOw
— Mumbai Indians (@mipaltan) May 19, 2024
நினைத்தபடி இந்த சீசன் அமையவில்லை. ஆனாலும், நான் உரிமையாளர் மட்டும் கிடையாது, அணியின் மிக பெரிய ரசிகை தான். இந்த ஜெர்சியை அணிவது எனக்கு பெருமையே. இந்த சீசன் தவறு குறித்து நாம் ஒன்றாக ஆலோசனை மேற்கொள்வோம். மீண்டும் பலமான அணியாக தொடருக்கு திரும்புவோம்.
மேலும், ரோகித், ஹர்திக், சூரியகுமார், பும்ரா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களுக்காக குரல் கொடுக்கும். டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்படுங்கள்.