முகலாய காலத்து மோதிரம் முதல் 600 கோடி Necklace வரை - கவனமீர்த்த நீதா அம்பானி
அம்பானி குடும்ப திருமணம் தான் தற்போது இந்தியாவெங்கும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
அம்பானி மகன் திருமணம்
உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடித்துள்ளது.திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத்தின் ஜாம் நகரில் கலைக்கட்டியுள்ளது.
நாட்டின் மிக முக்கிய பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டு வருகிறார்கள். மிகவும் ஆடம்பரமாக பணத்தை கொட்டி நடைபெற்று வரும் இந்த திருமணத்தில், அம்பானியின் மனைவி நீதா அம்பானி.அணித்திருந்த உடை, நகைகள் குறித்தான பேச்சுக்களும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
அவர் அணிந்திருந்த புடவை முதல் கையில் போட்டிருந்த மோதிரம் வரை அனைத்துமே சாமானியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மணீஷ் மல்ஹோத்ரா என்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்த தமிழர் பாரம்பரியமான காஞ்சிபுரம் புடவையை தான் அவர் அணிந்திருந்தார்.\
முகலாய காலத்து ring
அதே போல அப்புடவைக்கு மேட்சிங்காக அவர் அணிந்திருந்த நெக்லஸ் விலை கேட்டால் உங்களுக்கு தலை சுற்றிவிடும். ஆம், சுமார் 400 முதல் 500 கோடி வரை இந்த நெக்லஸ் இருக்கும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராஜ வம்சத்தை சேர்ந்த மோதிரத்தை அவர் அணிந்திருந்தார்.
முகலாயர் காலத்து "சொர்க்கத்தின் கண்ணாடி" மோதிரத்தை தான் நீதா அம்பானி அணிந்திருந்தார்.52.58 காரட் கொண்ட இந்த வைர மோதிரத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.53 கோடி என்றும் பேசப்படுகிறது.