ஊறுகாய் போடுகிறவர் நிதியமைச்சர் ஆக கூடாதா? நிர்மலா சீதாராமன் கேள்வி
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பொருட்களின் விலை குறைந்துள்ளது என நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
சென்னையில் 2047ம் ஆண்டை நோக்கிய இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிப் பாதையில் ‘மத்திய நிதியமைச்சரின் நுண்ணறிவு’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார்.இதில் பேசிய அவர், இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துவருகிறது. அதன் காரணமாக, நொடிப்பொழுதில் இந்தியாவில் இருந்து எங்கு வேண்டுமென்றாலும் பணம் அனுப்ப முடிகிறது.
ஜிஎஸ்டி
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வரிவிதிப்பு நடைமுறைகளில் முழுமையாக அமல்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். வரிச் சட்டங்களுக்கு இணங்குவது குடிமக்களின் கடமை என்றால் வரி செலுத்துவோருக்கு எளிமையான கட்டமைப்பை உருவாக்கி கொடுப்பது அரசின் பொறுப்பு.
ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலமாக அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் 10 பேர் உண்மையான தகவல்களை பரப்புகின்றனர் என்றால் 100 பேர் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.
ஊறுகாய் போடுகிறவர்
இன்னும் அதிகமாக பேசினால், ஊறுகாய் போடுகிறவர்களைக் கொண்டு போய் நிதியமைச்சர் ஆக்கினால் இப்படித்தான் ஆகும் என்றும், அவரை உடனே பதவியை விட்டு இறக்குங்கள் என்றும் பலர் விமர்சனம் செய்கின்றனர். அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை.
என்னைப் பொறுத்தவரை ஊறுகாய் போடுவதையும், நிதியமைச்சராக பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றுவதையும் நான் ஒருபோதும் கவுரவ குறைச்சலாக பார்ப்பது இல்லை. ஊறுகாய் போடுகிறவர் நிதியமைச்சராக பதவி வகிக்கக்கூடாதா? என பேசினார்.