மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து...!

M K Stalin Smt Nirmala Sitharaman
By Nandhini Aug 18, 2022 06:51 AM GMT
Report

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதலமைச்சர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய 63-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இதனையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியம் பெற உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.