நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் சிலருக்கு பொறாமை - நிர்மலா சீதாராமன் பெருமிதம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து சிலர் பொறாமைப் படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சுப்ராயன், உயர்கல்வி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெருநிறுவனங்கள் கடனை மத்திய அரசு ரத்து செய்யவில்லை. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை ஏதோ பெரு நிறுவனங்களுக்கு அரசு வழங்குவது போல உள்நோக்கத்துடன் எதிர்கட்சியினர் பேசுகிறார்கள்,
பொருளாதார வளர்ச்சி
இது முற்றிலும் தவறு. பெருநிறுவனங்களிடம் இருந்து இப்போதும் பணம் வசூலிக்கப்பட்டு, அதை சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. தொடர்ந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு நாடாளுமன்றத்தில் சிலர் பொறாமைப்படுவது வருத்தமளிக்கிறது.
இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அது பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் ஆனால் சிலர் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள் எனத் தெரிவித்தார்.