தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயில்களிலும் சொத்துகளை திருடி வருகிறார்கள் - நிர்மலா சீதாராமன்!

Smt Nirmala Sitharaman Tamil nadu Madurai
By Jiyath Nov 21, 2023 02:16 AM GMT
Report

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயில்களிலும் சொத்துகளைத் திருடி வருகிறார்கள் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

உலக மரபு வார விழா

உலக மரபு வார விழாவை முன்னிட்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் 5 நாள்கள் குடைவரைக் கோயில் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயில்களிலும் சொத்துகளை திருடி வருகிறார்கள் - நிர்மலா சீதாராமன்! | Nirmala Sitharaman About Tamil Heritage In Madurai

பின்னர் பேசிய அவர் "தமிழகத்திலுள்ள பாரம்பர்யத்தை மக்களுக்குச் சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மனவேதனை என்னிடத்தில் இருந்தது. தமிழக பாரம்பர்யத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும்போது, `அரசியல் நுழைகிறது, பாரம்பரியம் இது அல்ல... அது' எனப் பல சர்ச்சைகள் வருகின்றன. ஜனநாயக நாட்டில் சர்ச்சைகள் வரலாம், எல்லோரும் எல்லாம் பேசலாம்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

நிர்மலா சீதாராமன்

தொல்லியல் பாறைகள் சிதிலமடைந்திருப்பது, மனதுக்கு வேதனையாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்களுக்கும், குடைவரைக் கோயில்களுக்கும் தொடர்புகள் இருக்கின்றன. குடைவரைக் கோயில்களிலுள்ள எழுத்துகளுக்கும் தமிழ் மொழி, ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றுக்கும் தொடர்பு உள்ளது.

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயில்களிலும் சொத்துகளை திருடி வருகிறார்கள் - நிர்மலா சீதாராமன்! | Nirmala Sitharaman About Tamil Heritage In Madurai

நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பர்யம்தான். அதை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயில்களிலும் சொத்துகளைத் திருடி வருகிறார்கள், கோயில்களில் திருடப்படும் சொத்துகள் யாருக்குப் போகின்றன எனத் தெரியவில்லை" என்றார்.