ராமர அவமானம் படுத்திய போது சும்மா இருந்தோமே ...அது தான் சனாதனம்..நிர்மலா சீதாராமன்
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், ராமரை தமிழகத்தில் அவமதித்தபோது அமைதியாக இருந்ததே சனாதனம் என தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
செய்தியாளர் சந்திப்பு சென்னையில் தணிக்கையாளர் சங்கத்தின் 90-வது ஆண்டு விழா கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பட்டய கணக்கர், தணிக்கையாளர்கள் தங்கள் பணியை திறமையாக செய்ய வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையானவற்றை மத்திய அரசு வழங்கி வருவதாக கூறினார்.
விழாவில் பங்கெடுத்த கொண்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொது மேடையில் ஒரு மதத்தை ஒழிக்க போகிறோம் என்று பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என விமர்சித்தார்.
அது தான் சனாதனம்
தொடர்ந்து சனாதனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அரசியல் சாசனத்தின்படி உறுதிமொழி ஏற்ற அமைச்சர் சனாதனம் குறித்து பொதுவெளியில் பேசுவது சரியானது அல்ல என கூறி, எந்த ஒரு மக்களுக்கும், யாருக்கும் விரோதம் வரும் அளவுக்கு பேசக் கூடாது என்று தெளிவாக உறுதிமொழி ஏற்கிறோம் என சுட்டிக்காட்டினார். அமைச்சராக உறுதிமொழி ஏற்ற பின்பு, ஏதோ ஒரு மதத்தை ஒழிக்கப் போகிறேன் என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் அமைச்சர் அவ்வாறு கூற அதிகாரம் இல்லை என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார்.
உணர்ச்சிவசப்பட்டு பேசாமல், யோசிச்சி பேசவேண்டும் என விளக்கமளித்த அவர், இந்து அறநிலையத்துறை அமைச்சர் இருக்கும் அந்த மேடையில் ஒழிக்க வேண்டும் என்று சொல்வதை கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் என்றும் இதன்மூலம் எதை காப்பாற்றுகிறீர்கள்? என வினவிய நிர்மலா சீதாராமன், ராமரின் கழுத்தில் செருப்பு அணிவித்து ஊர்வலம் நடத்திய தமிழ்நாட்டில் எந்த பதிலடியும் இல்லாமல், வன்முறை கூடாது இருந்ததே சனாதன தர்மம் என கூறினார்.