கள்ளக்குறிச்சி விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்!
கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "கள்ளக்குறிச்சியில் 56 பேர் உயிரிழப்பு, 200க்கும் மேற்பட்டோர் இன்னும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.
கள்ளச்சாராயம் காரணமாக 5 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எங்கே? ராகுல்காந்தி எங்கே? ஏன் மெளனம்?
சிபிஐ விசாரணை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது அதிர்ச்சி அளிக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் கள்ளச்சாராயத்தால் இறக்கும்போது ராகுல் காந்தியிடமிருந்து ஒரு அறிக்கை கூட வரவில்லை.
கள்ளக்குறிச்சி விவகாரத்தையும் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். மாநில விசாரணை அமைப்புகள் விசாரித்தால் உண்மைகள் வெளிவருமா என்பது சந்தேகம்தான். கள்ளச்சாராயம் விற்றவர்களுடன் ஆளும் திமுகவுக்கு தொடர்பு இருப்பதால் முறையான விசாரணை நடக்காது” என்று தெரிவித்துள்ளார்.