குடிக்காதே என அறிவுரை சொல்வதை விட...கள்ளக்குறிச்சியில் கமல் கருத்து!!
கள்ளக்குறிச்சி மரணம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தமிழகத்தை அதிரவைத்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து படையெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கள்ளக்குறிச்சி சென்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியது வருமாறு,
இந்த தருணத்தில் நாம் இதனை இதை அரசியல் ஆதாயமாகவோ, விமர்சனமாகவோ பார்க்காமல் நமக்கு எல்லோருக்கும் அந்த கடமை உள்ளது. நான் இப்போ தான் அந்த வீட்டில் பேசிட்டு இருக்கும் போது சொன்னேன்.
வள்ளுவரின் குரலில்...
வள்ளுவரின் குரலில் கள்ளு குறித்து இருக்கிறது என்றால் அப்போதிலித்தே இது இருக்கிறது. அதிலிருந்த்து மீள்வதற்கான வழியை மக்களுக்கு சொல்லி கொடுக்கணும்.
இந்த சாராய வியாபாரத்தை செய்யும் எந்த அரசாக இருந்தாலும், இதனை ஏன் ஒரு அளவிற்கு மேலாக எடுத்து கொள்ளக்கூடாது என்பதை பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். இது பெரிய அளவில் தயார் செய்திட்டு இருக்கிறார்கள்.
மருந்து கடைகளை விட அதிகளவில் டாஸ்மார்க் உள்ளது. ஆகா இவர்களுக்கு குடிக்காதீர்கள் என்ற ஒரு அறிவுரை என்பதை கூறுவதை விட கொஞ்சமாக குடியுங்கள் என கூறும் அறிவுரை இடங்கள் டாஸ்மார்க் பக்கத்திலேயே இருக்க வேண்டும்.
மதுக்கடையை மூடிட்டா...
சட்டென மதுக்கடைகளை மூடிவிட்டால் சரியாகிடும் என்பது தவறான கருத்து. அதற்கு முன்னுதாரணம் அமெரிக்கா. உலகம் பாடம் கற்றுக்கொண்டுள்ளது. Awareness காதுகுத்து தான் இந்த psychatrist. வருமானம் ஈட்டும் பொது, அதனை மக்களுக்கு திரும்பி போகும் வகையில் இருக்கணும்.
மருந்து கடைகளை விட டாஸ்மார்க் அதிகமாக இருப்பது விபத்தல்ல. தெரிந்தே செய்யப்பட்டது தான்.
தமிழ்நாடு அரசு என்ன செய்யவேண்டுமோ அவர்களை அதனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை அரசு மீது தான் விமர்சனம் வைப்பது.