பணி அழுத்தத்தால் மரணம்; கடவுளை நம்ப வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேச்சால் சர்ச்சை

Smt Nirmala Sitharaman Kerala India
By Karthikraja Sep 23, 2024 01:48 PM GMT
Report

பணி அழுத்தம் காரணமாக இறந்த பெண் குறித்து நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அன்னா செபாஸ்டியன்

கேரளாவைச் சேர்ந்தவர் அன்னா செபாஸ்டியன் (anna sebastian perayil) (26) என்ற பெண், பன்னாட்டு நிறுவனத்தில் பட்டய கணக்கராக பணியாற்றி வந்தார். 

anna sebastian perayil

பணி அழுத்தம் காரணமாகதான் என் மகள் இறந்தார் என அந்த பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார். இதனால் பெரு நிறுவனங்களின் வேலை கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என விவாதம் ஏற்பட்டது. 

அதிக வேலை; உயிரிழந்த 26 வயது பெண் - கம்பெனியில் இருந்து ஒருவர் கூட வராத கொடுமை!

அதிக வேலை; உயிரிழந்த 26 வயது பெண் - கம்பெனியில் இருந்து ஒருவர் கூட வராத கொடுமை!

நிர்மலா சீதாராமன்

இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நமது குழந்தைகள் கல்விக்காக கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்குச் சென்று உயர்தரத்துடன் வெளிவருகின்றனர். சி.ஏ படித்த பெண் ஒருவர், வேலை அழுத்தத்தை சமாளிக்க முடியாமல், இறந்து விட்டதாக எங்களுக்கு ஒரு செய்தி வந்தது. 

nirmala sitharaman

நீங்கள் என்ன படித்தாலும், நீங்கள் செய்யும் வேலை, அந்த அழுத்தத்தை சமாளிக்க உங்களுக்கு உள் வலிமை இருக்க வேண்டும், தெய்வீகத்தால் மட்டுமே இதை அடைய முடியும். கடவுளை நம்புங்கள், கடவுளின் அருள் நமக்கு இருக்க வேண்டும். கடவுளைத் தேடுங்கள், நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.

பிரியங்கா சதுர்வேதி

உங்கள் ஆத்மா சக்தி இதிலிருந்து மட்டுமே வளரும். வளர்ந்து வரும் ஆத்ம சக்தியால் மட்டுமே உள் பலம் வரும். கல்வி நிறுவனங்கள் தெய்வீகத்தையும் ஆன்மீகத்தையும் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் நம் பிள்ளைகளுக்கு உள் வலிமை கிடைக்கும். அது அவர்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் உதவும். அது எனது வலுவான நம்பிக்கை,” என பேசியுள்ளார்.

இவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, நிர்மலா சீதாராமன் அவர்களே, கடுமையான பட்டயக் கணக்கியல் பட்டப்படிப்பைத் படித்துள்ளதால் மன அழுத்தத்தைக் கையாளும் ஆற்றல் அண்ணாவுக்கு இருந்தது. 

தவறான வேலை கலாச்சாரம், அதிக வேலை நேரம் ஆகியவற்றால் தான் இறந்துள்ளார். பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்துவதை நிறுத்துங்கள், குறைந்தபட்சம் கொஞ்சம் உணர்ச்சியுடன் இருங்கள் என தெரிவித்துள்ளார்.