நாடே மணிப்பூர் மாதிரி ஆகிடும்....மீண்டும் மோடி வந்தால்! எச்சரிக்கும் நிர்மலா சீதாராமன் கணவர்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர், பிரதமர் மோடி குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றது.
மீண்டும் மோடி
10 ஆண்டு மத்திய ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக, வேண்டும் மீண்டும் மோடி என்ற முழக்கத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளது. 10 ஆண்டு ஆட்சி சாதனையை முன்னிறுத்தும் அக்கட்சி, நாட்டின் முன்னேற்றத்திற்காக மீண்டும் மோடி தான் பிரதமராகவேண்டும் என அழுத்தமாக தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றது.
அதே நேரத்தில், பிரதமர் மோடி மீதான எதிர்கருத்துக்களையும், பாஜக தோல்வியடைந்த விஷயங்களையும் குறிப்பிட்டு, தீவிர பிரச்சாரத்தை கையிலேடுத்துள்ளது எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி.
இந்த சூழலில் தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் மோடி குறித்து பரபரப்பாக பேசியுள்ளார்.
எச்சரிக்கை
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அரசியல் சாசனமும், நாட்டின் வரைபடமும் முற்றிலும் மாறிவிடும் என்று பொருளாதார நிபுணரான பிரபாகர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், மோடியே செங்கோட்டையில் இருந்து வெறுப்புப் பேச்சு கொடுப்பார் என்றும் தெரிவித்து அது அமைதியாகவோ அல்லது நுட்பமாகவோ செய்யப்படாது என்றும் சுட்டிக்காட்டினார்.
மணிப்பூரில் நடப்பது இங்கு நடக்காது என்று யாரும் நினைக்க வேண்டாம் என்று எச்சரித்த பிரபாகர், மணிப்பூர் மற்றும் லடாக்கில் நடப்பது நாடு முழுவதும் நடக்கும் என்றார்.