நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் - நீதிமன்றம் அதிரடி!
நீரவ் மோடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நீரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரிதான் நீரவ் மோடி. இவர் இங்கிலாந்துக்கு தப்பி சென்றுவிட்டார். தொடர்ந்து சிபிஐ புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறையில் நீரவ் மோடியிடம் நேரடியாக ஆய்வு செய்த இரண்டு உளவியல் நிபுணர்கள், அவர் மன அழுத்தத்துடனும், தற்கொலை எண்ணத்துடனும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் நீர்வ் மோடிக்கான பாதுகாப்பு குறித்து இந்திய அதிகாரிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதியளித்துள்ளார்.
நீதிமன்றம் அதிரடி
அதனையடுத்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது தனிப்பட்ட நலனை காப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். எனவே, நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் இருப்பதை காரணமாக சொல்லி இந்தியாவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பண மோசடி வழக்குகளை எதிர்கொள்வதில் இருந்து தப்பிப்பது நியாயமாகாது என லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.