யார் வந்தாலும் இது தான் நடக்கும் : அதிரடியாக அறிவித்த இங்கிலாந்து கேப்டன்

Irumporai
in கிரிக்கெட்Report this article
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்தது.
வரலாற்றை மாற்றுவோம்
இந்த நிலையில் ,இந்திய அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றால் அது அதிரடியாக தான் இருக்கும் என வரலாற்றை மாற்றி எழுத விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், “இதே போன்று அதிரடியாக விளையாடினால் எப்படிப்பட்ட இலக்கையும் அசால்டாக எட்டிவிடலாம். ஐந்து வாரங்களுக்கு முன்பு 378 ரன்கள் இலக்கு என்பது எல்லாம் எட்ட முடியாத இலக்காகவே பார்க்கப்பட்டிருக்கும்,
ஆனால் எங்களுக்கு தற்போது அப்படி தோன்றவில்லை. டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி, டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்களையும் அதிகப்படுத்த விரும்புகிறோம்.
இனிமே எல்லாம் மாறும்
அதே போல் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றால் அது அதிரடியாக தான் இருக்கும் என்பதையும் வரலாற்றில் பதிய வைக்க முயற்சிப்போம். பாரிஸ்டோவும், ஜோ ரூட்டும் மிக சிறப்பாக விளையாடினர்.
எங்கள் துவக்க வீரர்களும் சிறப்பாக விளையாடினர், குறிப்பாக பும்ராஹ், ஷமி ஆகியோரின் சவால் மிகுந்த பந்துவீச்சை அவர்கள் எளிதாக எதிர்கொண்டதன் மூலமே மற்றவர்களின் வேலை இலகுவானது” என்று தெரிவித்தார்.
பல்லை உடைப்பேன் - தொடரும் மோதல்.. ஜடேஜாவிற்கு ஆண்டர்சன் சொன்னது என்ன?