மக்களே கவனம்: மீண்டும் தலைதூக்கும் நிபா வைரஸ் - பதறும் நாடு
நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
நிபா வைரஸ்
கேரளா, கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து கடந்த மாத தொடக்கத்தில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் நிபா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்தனர்.
இதனால் கேரளாவை ஒட்டி உள்ள தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதித்தவர்கள் வந்தால் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.
மீண்டும் தீவிரம்
வெளவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியதாகக் கூறப்பட்ட நிலையில் வீட்டு விலங்குகளும், இறந்தால் உடனே ரிப்போர்ட் செய்ய கோழிக்கோட்டில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து,வயநாட்டில் உள்ள வவ்வால்களை சோதனை செய்ததில், அவற்றுக்கு நிபா தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், வவ்வால்கள் சாப்பிட்ட பழத்தை யாரும் சாப்பிட வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மூணாறு எம்.சி.காலணியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கியுள்ளதால் மீண்டும் நிபா வைரஸ் பயத்தில் மக்கள் உள்ளனர்.
இதனையடுத்து, வவ்வால்களை விரட்ட சுகாதாரத்துறையும், வனத்துறையும் சேர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.