கேரளாவில் வேகமெடுக்கும் நிபா வைரஸ்; 6 பேர் பாதிப்பு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Kerala India Virus
By Jiyath Sep 16, 2023 06:15 AM GMT
Report

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.  

நிபா வைரஸ்

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா அரசு துரிதப்படுத்தி வருகிறது. நேற்று வரை 6 பேர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் 

கேரளாவில் வேகமெடுக்கும் நிபா வைரஸ்; 6 பேர் பாதிப்பு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! | Nipah Virus Gaining In Kerala 6 People Affected

இதற்காக மத்திய குழு கோழிக்கோடு மாவட்டம் சென்று ஆய்வு நடித்து வருகிறது. மேலும், வருகிற 24ம் தேதி வரை அம்மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள், படிப்பு சார்ந்த நிறுவனங்கள், டியூசன் செண்டர் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு எந்த தடையும் இல்லை.

சுகாதார அமைச்சர் தகவல்

இந்நிலையில் கோழிக்கோட்டில் 1080 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாக கருதப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் நேற்று 130 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதில் 327 பேர் சுகாதார ஊழியர்கள் ஆவார்கள். 29 பேர் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 22 பேர் மலப்புரம், ஒருவர் வயநாடு, தலா 3 பேர் கண்ணூர், திரிச்சூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்த தகவலை கேரள மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.