ஏமன் நர்ஸுக்கு மரண தண்டனை - காப்பாற்ற இந்த ஒரு வழிதான்?
நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிமிஷா மரண தண்டனை
கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா ஏமன் அந்நாட்டைச் சேர்ந்த தலாலு அப்துல் மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்.
அவரது தண்டனையைத் தடுப்பதற்கான தொடர் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஜூலை 16ஆம் தேதி நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக சனாவில் உள்ள ஏமன் சிறைத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உறுதி
இந்நிலையில் இறந்தவரின் குடும்பத்தினர் ஏமன் சட்டப்படி இழப்பீட்டுத் தொகையை ஏற்கிறார்களா என்பதைப் பொறுத்தே இந்த வழக்கின் முடிவு அமையும் எனக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரே இறுதி முடிவை எடுக்க முடியும் என்று ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுவரை, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீட்டை ஏற்க எந்த விருப்பமும் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையைத் தடுப்பதற்கான தொடர் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அவரது விடுதலைக்கான முயற்சிகளுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில்,
விஷயங்கள் சிக்கலானவை. நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிமிஷாவின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.