நான் லோகேஷ் கனகராஜ் இல்லை...நீலகிரி அதிமுக வேட்பாளரின் திண்டாட்டம்
அதிமுகவின் சார்பில் நீலகிரி தொகுதியில் லோகேஷ் தங்கச்செல்வன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி தொகுதி
நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ஆர்.ராசா, பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தங்கச்செல்வன், நாம் தமிழர் சார்பில் அ.ஜெயக்குமார் போட்டியிடுகிறார்கள்.
முன்னாள் மத்திய அமைச்சர், தற்போதைய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போன்றோர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதி பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ஸ்டார் தொகுதியான நீலகிரி தமிழகத்தின் முக்கிய தொகுதியாகவே மாறியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இல்லை
அதிமுகவின் வேட்பாளர் லோகேஷ் தங்கச்செல்வன் அண்மையில் நடிகர் ரவி மரியாவுடன் நீலகிரியின் கூடலூர் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். கூடலுார் தொரப்பள்ளியில், தேர்தல் பிரசாரத்தை ஈடுபட்ட அவர், தனது பெயர் குறித்த குழப்பத்தை வாக்காளர்களுக்கு சுட்டிக்காட்டி, பிரசாரம் செய்துள்ளார்.
இது குறித்து லோகேஷ் தங்கச்செல்வன் கூறுகையில், எனது பெயரை சினிமா இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜின் பெயருடன் மக்கள் குழப்பி கொள்வதாக கூறினார். அதில் குழப்பமே வேண்டாம். எனது பெயர் லோகேஷ் தமிழ்ச்செல்வன். இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.