சத்து மாத்திரை சாப்பிட்ட சிறுமி பலி - 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
போட்டிப்போட்டுக் கொண்டு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழந்துள்ளார்.
சத்து மாத்திரை
ஊட்டி, உருது நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்குச் சத்து மாத்திரைகளை சில நாட்களுக்கு முன்பு வழங்கியுள்ளனர். அப்போது மாத்திரை டாப்பாவை ஆசிரியர் அங்கேயே மறந்து வைத்துவிட்டதாகத் தெரிகிறது.
அதை எடுத்த 4 மாணவிகள் டப்பாவில் இருந்த சத்து மாத்திரைகளைப் போட்டிப் போட்டுக் கொண்டு சாப்பிட்டுள்ளனர். அளவுக்கு அதிகமாகச் சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டதால் 4 மாணவிகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மாணவி பலி
இதையடுத்து அவர்கள் கோவையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்து வந்ததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அப்போது வரு வழியிலேயே 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் முகமது அமீன், ஆசிரியை கலைவாணி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.