துயரத்தில் சிக்கியிருக்கும் வயநாடு...நிவாரண பணிகளில் மும்முரம் காட்டும் நிகிலா விமல்!! குவியும் பாராட்டுக்கள்
மலையாள நடிகை நிகிலா விமல், கேரளா வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
வயநாடு விபத்து
தொடர்ந்து வெளிவரும் செய்திகள் நமக்கு மேலும் மேலும் அதிர்ச்சியையே கொடுத்து வருகிறது. 2-வது நாளாக நடந்து வரும் மீட்புப்பணிகளில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது வயநாடு பேரிடர். தற்போது பலி எண்ணிக்கை 158'ஆக உயர்ந்துள்ள சூழலில், 1000'திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்கள். பலரும் தங்களது உதவி கரத்தை வயநாட்டு மக்களுக்கு நீட்டியுள்ளார்கள்.
உதவும் நிகிலா
அந்த வரிசையில் இணைந்துள்ளார் பிரபல நடிகை நிகிலா விமல். பல அமைப்புகள் சார்பில் கேரளாவின் பல இடங்களிலும் நிவாரண உதவிகள் வழங்கும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வரிசையில், தளிபரம் என்ற பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள DYFI நிவாரண முகாமிற்கு வருகை தந்தவர் தன்னார்வலர்களுடன் சேர்ந்து பணிகளை மேற்கொண்டார். கண்ணூர் தளி பரம்பரை பகுதியை சேர்ந்தவரே நிகிலா விமல் எப்பாது குறிப்பிடத்தக்கது.
நடிகையாக இருக்கும் போதிலும் தனி கவனம் எடுத்து கொள்ளாமல் தானாக முன்வந்து உதவியுள்ளது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளிவந்து, பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.