எனக்கு அந்த ஆசை இருக்கு - அதுக்கு தான் கல்யாணமே - வெளிப்படையாக சொன்ன விஜய் சேதுபதி பட நடிகை
நடிகை நிகாரிகா கோனிடேலா தனது மறுமணம் குறித்து பேசியுள்ளார்.
நிகாரிகா கோனிடேலா
தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நிகாரிகா கோனிடேலா.
தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவின் தம்பி மகளான இவர், சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிய வெற்றி படங்கள் நிகாரிகா கோனிடேலாவிற்கு அமையவில்லை. Pink Elephant Pictures என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ள நிகாரிகா கோனிடேலா அதன் மூலம் "முட்டபாப்பு ஆவக்கை" என்ற தெலுங்கு வெப் சீரிஸ்'ஸை தயாரித்துள்ளார்.
பெரிய வெற்றி படங்கள் அமையாத நிலையில், இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு சைதன்யா ஜோனலகட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான 3 வருடங்களிலேயே அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட, இந்த ஜோடி சட்டரீதியாக விவாகரத்து பெற்றது.
2-வது marriage
தற்போது மீண்டும், நிகாரிகா கோனிடேலா படங்களில் கவனம் செலுத்துவதாக கூறப்படும் நிலையில், அவர் தனது இரண்டாவது திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் பேசியது வருமாறு, தனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டு, குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது என்றும் எனவே மீண்டும் திருமணம் செய்து கொள்வேன், என் மனதுக்கு பிடித்தவர் என தெரிவித்துள்ளார்.