ஷூட்டிங் போது லிப்லாக் அடிப்பேன் என மிரட்டிய நடிகர் - பரிதவித்த நதியா
அம்மா கதாபாத்திரங்களில் நடித்து தற்போதைய சினிமா ரசிகர்களிடம் அறிந்த முகமாக இருக்கின்றார் நதியா.
நதியா
தமிழ் சினிமாவில் 80-களில் பல முன்னணி நடிகைகள் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து வந்த போதும், கவர்ச்சி இல்லாமல், நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றவர் நதியா.
நாட்டிய பேரொளி பதமினியின் உறவினரான நதியா அவருடன் மலையாளத்தில் "நோக்கித தூரத்து கண்ணும் நாட்டு" என்ற படத்தின் மூலம் 1984-ஆம் ஆண்டு அறிமுகமாகினார். இப்படம் தாம் தமிழில் "பூவே பூச்சூடவா" என்ற பெயரில் தமிழில் ரீமேக்காகி பெரும் வெற்றி படமாக அமைந்தது.
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி, சத்யராஜ், மோகன், பிரபு என வரிசையாக எண்ணற்ற ஹிட் படங்களில் நடித்தவர், சிறுது காலம் கழித்து ஜெயம் ரவியின் எம்.குமரன் S/O மகாலக்ஷ்மி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
மிரட்டிய நடிகர்
அதே போல தெலுங்கில் பவன் கல்யாணுடன் அவர் நடித்த "அத்தரின்டிக்கி தாரேதி" படமும் பெரிய ஹிட்டாக வரிசையாக தற்போது படஙக்ளில் நடித்து வருகின்றார். இவர் மலையாளத்தில் நடிகர் முகேஷ்ஷுடன் படத்தில் நடிக்கும் போது அவர், தினமும் ஷூட்டிங்கின் போது, ஏதாவது ஜோக் சொல்லி, சிரிக்க வைப்பாராம்.
அப்படி அவர் அடித்த ஜோக் ஒன்றிற்கு நதியா "ஜோக்கர்" என பாராட்ட, அன்று முதல் படக்குழுவினரும் முகேஷை ஜோக்கர் என்றே சொல்லி வந்துள்ளனர்.
இதனால், முகேஷ் இனி ஜோக்கர் என்றால் முத்தம் கொடுத்து விடுவேன் என கூற, அதற்கு பயந்து நடிகை நதியா, எப்போதும் வாயை மூடிக்கொண்டே தான் இருந்துள்ளார்.