முன்னாள் காதலனை பழி வாங்க சூப்பில் விஷம் கலந்த சிறுமி - சூப்பை குடித்த நண்பர்களும் பலி

Nigeria Crime Death
By Karthikraja Nov 02, 2024 10:50 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 முன்னாள் காதலனை பழி வாங்க சிறுமி சூப்பில் விஷம் கலந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

நைஜீரியா

நைஜீரியாவின் எடோ மாகாணத்தை சேர்ந்த எலோஜி எசேக்கியேல் என்பவர் தனது மகன் இம்மானுவேல் எலோஜியை(19) காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்தார். 

nigeria soup death

அதன் பின்பு அங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவரது மகன் இம்மானுவேல் எலோஜியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

71 லட்சத்தை கையால் எண்ண வைத்து பழி வாங்கிய வாடிக்கையாளர் - அப்படி என்ன கோபம்?

71 லட்சத்தை கையால் எண்ண வைத்து பழி வாங்கிய வாடிக்கையாளர் - அப்படி என்ன கோபம்?

5 பேர் சடலம்

மேலும் அந்த அறையில் இம்மானுவேல் எலோஜியின் 16 வயதான காதலி அடா சாமுவேல் எஃப், மற்றும் 3 நண்பர்கள் சடலமாக கிடந்துள்ளனர். உடனடியாக அவர்களது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

nigeria soup poison

முதலில் இவர்கள் கெட்டுப்போன உணவை சாப்பிட்டிருக்கலாம் அல்லது நச்சுப்புகை காரணமாக இறந்திருக்கலாம் என காவல்துறையினர் நினைத்தனர்.

சூப்பில் விஷம்

பின்னர் தான் இம்மானுவேல் எலோஜியின் முன்னாள் காதலியான ஆயிஷா சுலைமான் எஃப்(16) என்ற பெண் இம்மானுவேல் எலோஜி குடித்த சூப்பில் விஷம் கலந்து உள்ளார் என தெரியவந்துள்ளது. விஷம் கலக்கப்பட்டது தெரியாத இம்மானுவேல் எலோஜி அந்த சூப்பை தனது நண்பர்களுடன் சேர்ந்து அருந்தியுள்ளார்.  

nigeria girl poison soup for ex lover

இதனால் 5 பெரும் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த உள்ளூர்வாசிகள் கடும் ஆத்திரமடைந்து ஆயிஷா சுலைமானை தாக்க முயன்றனர். காவல்துறை அவர்களிடமிருந்து ஆயிஷா சுலைமானை மீட்டு விசாரித்து வருகின்றனர். விசாரணையில் காதல் முறிவுக்கு பழி வாங்கவே இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.