திசையெங்கும் ஒலித்த பயங்கர சத்தம்; கொலைவெறித் தாக்குதல் - 113 பேர் பலி!
ஆயுதக் குழு கொலைவெறித் தாக்குதலில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.
பயங்கர தாக்குதல்
அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஆப்பிரிக்க நாடாக நைஜீரியா உள்ளது. இதன் மத்தியப் பகுதியில் ப்ளேட்டூ எனும் மாகாணம் உள்ளது.
இங்கு, இனக் கலவரங்கள், மத மோதல்கள், அரசியல் கிளர்ச்சிகள், கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோருக்கும் - விவசாயிகளுக்கும் இடையேயான மோதல்கள், கொள்ளைக்காரர்களின் தாக்குதல்கள் என நடைபெறுவது வழக்கம்.
113 பேர் பலி
அந்த வகையில், அங்கு ஆயுதக்குழுக்களை சேர்ந்த இரண்டு குழுக்கள் துப்பாக்கி சண்டை நடத்தின. 20 க்கும் மேற்பட்ட வெவ்வேறு சமூகங்களை குறிவைத்து உள்ளூர் கொள்கை கும்பல் இத்தாக்குதலை நடத்தியது.
இந்த வன்முறை போக்கோஸ் பகுதியில் இருந்து பார்கின் லாடி வரை பரவியது. முதற்கட்டமாக இந்தத் தாக்குதலில் 16 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, 113 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. மேலும், 300 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் அரசாங்கம், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது யார் என்பது பற்றி எந்த விவரமும் தெரிவிக்கவிக்கப்படவில்லை. காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.