நைஜீரியாவில் பயங்கர குண்டு வெடிப்பு : பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு..!

Nigeria Death
By Nandhini Jan 26, 2023 08:28 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

நைஜீரியா நடைபெற்ற பயங்கர குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 

பயங்கர குண்டு வெடிப்பு : 50 பேர் பரிதாப பலி 

நைஜீரியா, வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  இறந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், கால் நடை மேய்ப்பவர்கள், பொதுமக்கள் என உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலுசார் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், வடமத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.      

nigeria-bombings-54-herdsmen-killed