குடும்பத்தோடு கொன்று விடுவதாக மிரட்டுகிறார் - நடிகை நிதி அகர்வால் பரபரப்பு புகார்

Nidhhi Agerwal Tamil Actress
By Karthikraja Jan 09, 2025 11:45 AM GMT
Report

தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக நடிகை நிதி அகர்வால் புகாரளித்துள்ளார்.

நிதி அகர்வால்

சிலம்பரசன் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி, உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கலகத்தலைவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

nidhhi agerwal நிதி அகர்வால்

தமிழ் மட்டுமல்லாது, சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பவன் கல்யாணுடன் இவர் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ராஜா சாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

சிம்புவிற்கும் எனக்கும் காதலா? - முதன்முறையாக மனம் திறந்த நிதி அகர்வால்

சிம்புவிற்கும் எனக்கும் காதலா? - முதன்முறையாக மனம் திறந்த நிதி அகர்வால்

கொலை மிரட்டல்

இந்நிலையில் நிதி அகர்வால் ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில் சமூகவலைத்தளத்தில் மர்ம நபர் தன்னை ஆபாசமாக பேசி வருவதோடு, எனது குடும்பத்தையும் கொலை செய்திடுவதாக மிரட்டுகிறார்.

நிதி அகர்வால்

இதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். அந்த நபரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். தமிழில் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் சென்னையில் ரசிகர் ஒருவர் 2022 ஆம் ஆண்டு இவருக்காக கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.