சிம்புவிற்கும் எனக்கும் காதலா? - முதன்முறையாக மனம் திறந்த நிதி அகர்வால்

interview actor-simbu actress-nidhhi agerwal நடிகர் சிம்பு நடிகை நிதிஅகர்வால் காதல்
By Nandhini Feb 21, 2022 05:27 AM GMT
Report

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் பிரபல இயக்குநர் டி.ஆர்.ராஜேந்திரர் மகனாவார். இவர் சின்ன வயது முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது, தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் இந்தியில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘முன்னா மைக்கல்’ படத்தின் மூலம் திரைத்துறையில் காலெடி வைத்தார். அதன் பின்பு, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், வெளியான ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் நிதி அகர்வால். இப்படத்தில் இடம்பெற்ற ‘மாங்கல்யம்’ சூப்பர் ஹிட்டடித்தது.

சிம்புவிற்கும் எனக்கும் காதலா? - முதன்முறையாக மனம் திறந்த நிதி அகர்வால் | Actor Simbu Actress Nidhhi Agerwal Interview

சமீபத்தில் நடிகர் சிம்புவும், நிதி அகர்வாலும் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் சமூவலைத்தளங்களில் வைரலாக பரவியது.இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த வதந்திக்கெல்லாம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நிதி அகர்வால். இது குறித்து அவர், நடிப்பதை தாண்டி மற்ற எதிலும் ஆர்வம் கிடையாது. பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன் என்று கூறினார்.