கொரோனாவை முன்பே கணித்த நிக்கோலஸ் ஆஜுலா - நோ கருணை, 2025ல் பூமி பழி வாங்குமாம்!
நிக்கோலஸ் ஆஜுலாவின் 2025 குறித்த கணிப்புகள் கவனம் பெற்றுள்ளது.
நிக்கோலஸ் ஆஜுலா
லண்டனை சேர்ந்த ஹிப்னோ தெரபிஸ்ட் நிக்கோலஸ் ஆஜுலா(38). இவர் தனது 17 வயதில் யாரோ ஒருவர் தனது கனவில் வந்து எதிர்காலத்தை பற்றி கூறியதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர் ஆண்டு தோறும் தெரிவித்து வரும் கணிப்புகள் பெரும்பாலானாவை நிகழ்ந்துள்ளது. கோவிட் 19 தொற்று நோய் பரவல், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி, செயற்கை நுண்ணறிவின் எழுச்சி, நோட்ரே டேம் கதீட்ரலில் ஏற்பட்ட தீ உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்திருந்தார்.
இந்நிலையில் 2025 குறித்து கணித்துள்ள இவர், உலக மக்களிடையே இரக்கம், கருணை இல்லாத நிலை ஏற்படும். இந்த ஆண்டின் மத்தியில் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் வாய்ப்புள்ளது. மதம் மற்றும் தேசத்தின் பெயரால் மக்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்வார்கள்.
மூன்றாம் உலகப் போர்?
சுற்றுச்சூழலுக்கு மனிதர்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்கு பூமி பழிவாங்கும். காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் மனிதகுலத்திற்கு குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தும். அறிவியலில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும். குறிப்பாக இந்த ஆண்டு ஆய்வகங்களில் மனித உறுப்புகள் உருவாக்கப்படும்.
பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இடையே சமரசம் ஏற்படும். பிரபல அமெரிக்க பாடகர் கேட்டி பெர்ரி திருமண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆஸ்திரேலிய நடிகை கேட் பிளான்செட் பல விருதுகளை வெல்வார். அதிக மழைப்பொழிவால் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும்.
மழை வெள்ளம் மில்லியன் கணக்கான வீடுகளை அழிக்கும். இதன் காரணமாக ஏராளமான மக்கள் இடம்பெயர்வார்கள். கடல் மட்டம் உயர்ந்து, முழு நகரங்களையும் மூழ்கடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.