வானில் இருந்து விழுந்த சிலந்தி மழை - இதுதான் காரணமாம்

Viral Video Brazil
By Karthikraja Feb 04, 2025 10:09 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 வானில் இருந்து 500க்கும் மேற்பட்ட சிலந்திகள் மழை போல் விழுந்துள்ளது.

சிலந்தி மழை

வானில் இருந்து மீன் மழை பொழிவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகும். அதே போல் தற்போது சிலந்தி மழை பொழியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

spider rain in brazil

பிரேசில் நாட்டை சேர்ந்த சாவோ தோமே தாஸ் லெட்ராஸில்(Sao Thome das Letras) என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழந்துள்ளது.

இனச்சேர்க்கை சடங்கு

500க்கும் மேற்பட்ட சிலந்திகள் வானில் இருந்து விழுவது போன்ற வீடியோவை பகிர்ந்த பயனர் ஒருவர், "இந்த சிலந்திகள் வானத்தை ஆக்கிரமித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் மார்ச் வரை கிராமப்புறங்களில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலையில் இந்த நிகழ்வு நடைபெறும். இதனால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என தெரிவித்துள்ளார். 

இது குறித்து விளக்கமளித்துள்ள நிபுணர்கள், "இந்த நிகழ்வு ஒரு பெரிய சிலந்தி வலையால் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான சிலந்திகள் ஒத்திசைக்கப்பட்ட இனச்சேர்க்கை சடங்கில் ஈடுபட்டன. சிலந்திகள் தங்கள் சடங்கை முடித்ததும், அவை வலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டன. இது வானத்திலிருந்து சிலந்திகள் மழை பெய்யும் தோற்றத்தை உருவாக்கியுள்ளது" என கூறினர்.