20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ சோதனை - தமிழக 8 மாவட்டங்களில் பரபரப்பு!
Tamil nadu
Coimbatore
Madurai
Tirunelveli
By Sumathi
8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
என்.ஐ.ஏ சோதனை
நிதி வசூல், மூளைசலைவை செய்தல், உபகரணங்கள் கொடுத்து உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கார் வெடிப்பு வழக்கு
கோவை உக்கடம் பகுதியில் அபிபுல் ரகுமான் என்பவர் வீட்டிலும் நெல்லை ஏர்வாடியில் பக்ரூதின் அலி என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.