மூன்று மாநிலங்களில் 25 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை : காரணம் என்ன?

By Irumporai May 31, 2023 06:14 AM GMT
Report

கர்நாடகா , கேரளா, பீகார் ஆகிய மாநிலங்களில் 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

என்.ஐ.ஏ சோதனை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் கர்நாடகா, கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சுமார் 25 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தி வருகிறது .

பாட்னாவின் புல்வாரிஷரிஃப் பகுதியில் ஏற்பட்ட வன்முறை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த PFI மற்றும் அதன் தலைவர்கள் உள்ளிட்டவர்களின் ஈடுபாடு தொடர்பான சதித்திட்டத்துடன் தொடர்புடைய, சந்தேக நபர்களின் வளாகங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன. 

மூன்று மாநிலங்களில் 25 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை : காரணம் என்ன? | Nia Officials Raided 25 Places In Three States

25 இடங்களில் சோதனை

முன்னதாக, பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள புல்வாரிஷரிப் காவல் நிலையத்தில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி NIA-ஆல் மீண்டும் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். PFI தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி 4-5 தேதிகளில், என்ஐஏ பீகாரின் மோதிஹாரியில் 8 இடங்களில் சோதனை நடத்தியது.

தீவிரவாதிகள் தொடர்பா

அப்போது, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்பாடு செய்த இருவரை கைது செய்தது. இந்த நிலையில், புல்வாரிஷெரீப் சதி வழக்கில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் பல கட்டங்களாக சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று கர்நாடகா, கேரளா, பீகார் மாநிலங்களில் சுமார் 25 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கர்நாடகாவில் 16 இடங்களிலும், பீகார், கேரளாவில் 9 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, பிரதமர் மோடி கடந்த ஆண்டு பீகார் சென்றபோது, அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதனால் திடீர் நடத்தி 2 தீவிரவாதிகளை கைது செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.