பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு? 20 இடங்களில் என்ஐஏ திடீர் ரெய்டு - பரபரப்பு!
தமிழகத்தில் 20 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.
என்.ஐ.ஏ. சோதனை
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஐந்து இடங்கள் மயிலாடுதுறையில் 15 இடங்களில் ஒரே நேரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.

திருமுல்லைவாசலைச் சேர்ந்த ஃபாசித் மற்றும் எல்லை கட்டிருப்பு தெருவில் வசித்து வரும் சாதிக் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
என்ன காரணம்?
ஐஎஸ்ஐ தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவதாக தெரிகிறது.

முன்னதாக பல்வேறு மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பாக கடந்த 2023ஆம் ஆண்டு புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
என்.பி.பி தரப்பால் தடுக்கப்படும் வலி. வடக்கு அபிவிருத்தி! தவிசாளர் சுகிர்தன் குற்றச்சாட்டு IBC Tamil