என்னா வெயிலு; குளித்துக்கொண்டே பைக்கில் சுற்றும் இளைஞர்கள் - வைரல் வீடியோ
பைக்கில் 2 இளைஞர்கள் குளித்தபடி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
கொளுத்தும் வெயில்
தமிழகத்தில் கோடை வெயில் வெப்பம் அதிகமாக உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 2 நாட்களாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்து விட்டது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பைக்கில் குளியல்
இந்நிலையில் நெய்வேலியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கொளுத்தும் வெயிலை சமாளிக்க இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வாலியில் தண்ணீர் வைத்து குளித்துக்கொண்டே செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், என்னா வெயிலு... நீங்களும் இந்த மாதிரி தண்ணீரில் குளித்துவிட்டு. வீட்டிலே உட்கார்ந்திருங்கள. என்னா வெயிலு. தண்ணீரை நிறைய குடிங்க என கூறுகிறார்கள்.